கோவை: கொரோனா பெருந்தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்பாடுகள் குறித்து, வால்பாறையில் காவல்துறை வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் காவல்துறை வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமை தாங்கினார். கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி மளிகை, காய்கறி, பால் மற்றும் மருந்தகங்கள் காலை 6 மணி முதல் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட கட்டுப்பாடுகளை முறையாகக் கடைப்பிடிக்க அனைத்து துறைகளும் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில், வால்பாறையில் உள்ள வியாபாரிகள் அரசு அறிவித்துள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். கடைக்கு வரும் வாகனங்களில் இருந்து சரக்குகளைக் குறிப்பிட்ட நேரத்தில் இறக்கி ஏற்ற வேண்டும் என்று காவல்துறை ஆய்வாளர் கற்பகம் வியாபாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும், முகக் கவசம் அணிதல் தனிமனித இடைவெளி கடைப்பிடித்தல் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். இக்கூட்டத்தில் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம், உதவி ஆய்வாளர், காவலர்கள் மற்றும் வியாபாரிகள், வணிகர் சங்க பிரதிநிதிகள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.