பல்லடம் அருகே குடிபோதையில் இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்ற காவலர் கைது!

திருப்பூர்: பல்லடம் அருகே குடிபோதையில் இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்ற காவலர் கைது செய்யப்பட்டார்.


திருப்பூர்: பல்லடம் அருகே குடிபோதையில் இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்ற காவலர் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிபவர் ராஜேஷ். இவர் கடந்த 30ம் தேதி பல்லடம் அருகே உள்ள சிங்கனூர் அரசு மதுபான கடை முன்பு சீருடை இல்லாமல் நின்றுகொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக கட்டடத் தொழிலாளி பூவரசன் தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவரைத் தடுத்து நிறுத்திய போலீஸ் ராஜேஷ் வண்டியின் ஆர்.சி.புக், லைசென்ஸ், எடு என மிரட்டியுள்ளார். ஆர்.சி. புக் வீட்டில் உள்ளது என்று கூறவே வண்டியை நிறுத்திவிட்டு போய் எடுத்து வா என கூறி உள்ளார்.

இதையடுத்து, இருசக்கர வாகனத்தை அவரிடம் கொடுத்துவிட்டு நடந்து சென்று வண்டியின் ஆர்.சி.புக்கை எடுத்துக் கொண்டு சிங்கனூர் வந்துள்ளார். அங்கு வந்து பார்த்த பொழுது இருசக்கர வாகனத்துடன் போலீஸ்காரர் மாயமானது தெரிய வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பூவரசன் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பின்னர், புகாரின் அடிப்படையில் பல்லடம் போலீசார் விசாரணை செய்த பொழுது, விடுமுறையில் இருந்த ராஜேஷ் சிங்கனூர் மதுபான கடைக்கு மது அருந்த வந்ததும், மதுபோதையில் இருந்த அவர் இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்றதும் தெரியவந்தது.



இதனை தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில் அவிநாசிபாளையம் போலீஸ் ராஜேஷை பல்லடம் காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...