கோவை காந்திபுரம் பகுதியில் கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை!

கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் காந்திபுரம் பகுதியில் ஒரு மரத்தில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி இருந்தார். இதுகுறித்து நடை பயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்கள் காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து, தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், அவரது உடலை மீட்டனர். அவர் காக்கி கலர் யூனிபார்ம் அணிந்து இருந்தார். அவருடைய அடையாள அட்டையில் ஆனந்தகுமார் என பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தது. இவர் ஆட்டோ ஓட்டுநர் என்பது தெரியவந்தது.

மேலும், அவர் தன்னுடைய பேன்ட் பையில் கடன் தொல்லை அதிகமான காரணத்தால் என்னுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடனிலிருந்து மீள முடியாத நிலையால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்ற உருக்கமான கடிதம் கிடைத்தது.

இதையடுத்து, போலீசார் அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த அதிகாலை சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...