கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு!

கோவை: கோவையில் கஞ்சா வியாபாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


கோவை: கோவையில் கஞ்சா வியாபாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை சாய்பாபா காலனி போலீசாருக்கு பி.என். புதூர் பகுதியில் கஞ்சா விற்றதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தகவலின் பேரில் போலீசார் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர்.

அப்போது, அவர்களிடம் ஒரு கிலோ 500 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் திடியலூரில் சேர்ந்த பிரகாஷ் (54) மற்றும் மதுரையைச் சேர்ந்த ஜெயவீரன் (53) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் கஞ்சா வியாபாரிகள் இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...