திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே சாராயம் காய்ச்சிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே சாராயம் காய்ச்சிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள பொன்னலம்மன் சோலை பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக தளி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.
பின்னர், தகவலின் அடிப்படையில் பொன்னலம்மன் சோலை பகுதியில் மாரிமுத்து என்பவர் தோட்டத்தில் சோதனை நடத்தப்பட்டதில் அங்கு சாராயம் காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, சாராயம் காய்ச்சப்பட்ட ஊறல் காவல்துறையினரால் அழிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக தோட்டத்தின் உரிமையாளர் மாரிமுத்து மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.