கோவை: பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் சார்பில் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு காவல் துறையினர் சார்பில் இன்று சிக்கலாம் பாளையத்தில் பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் கிராமிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கணேஷ்மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கிராம மக்கள் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கட்டாயம் முககவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், மேலும் கிராமங்களில் சந்தேகத்திற்கிடமாக யாராவது சுற்றித் திரிந்தால் உடனடியாக காவல் நிலையத்திற்குத் தகவல் தர வேண்டும்.
மேலும் குற்றங்களைத் தடுக்க கிராம மக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.