வால்பாறையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையின் வேண்டுகோள்..!

கோவை: வால்பாறை மற்றும் சுற்றியுள்ள தேயிலைத் தோட்டங்களைச் சுற்றிலும் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு கருதி வனத்துறையின் சார்பாக வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.


கோவை: வால்பாறை மற்றும் சுற்றியுள்ள தேயிலைத் தோட்டங்களைச் சுற்றிலும் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு கருதி வனத்துறையின் சார்பாக வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

‘‘கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்றியுள்ள தேயிலைத் தோட்டங்களைச் சுற்றிலும் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. நாம் வனங்களுக்கு நடுவில்தான் வாழ்ந்து வருகிறோம் என்பதை அனுதினம் உணர்ந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும். வனங்களையும், வன உயிரினங்களையும் சார்ந்தே வாழ‌ந்து வருகிறோம். எனவே, தற்போது சிறுத்தை மற்றும் கரடிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகாலை 5 மணிக்கு மேலும் காலை 7 மணி வரையும், மாலை 5 மணிக்கு மேலும் இரவு நேரங்களிலும் தேவையில்லாமல் வெளியே சுற்றுவதையும், தனியாக நடமாடுவதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், தேயிலைத் தோட்டங்களின் நடுவேதான் நாம் குழந்தைகளுடன் குடியிருந்து வருகிறோம். இப்பகுதியில் நாம்‌ உணவு கழிவுகளையும் மாமிச கழிவுகளையும் வீசி விடுகிறோம். அதோடு மட்டுமல்லாமல் ஆடு, பசு, கோழி, நாய், என வளர்த்து வருகிறோம். அவைகளும்‌ வனவிலங்குகளை ஊருக்குள்ளும் நகரப் பகுதிகளுக்குள்ளும் வர வைக்கின்றன. எனவே, வீட்டு விலங்குகளை வளர்ப்பதை தவிர்த்தால், வனவிலங்குகள் வீடு தேடி வருவதைத் தவிர்த்து, நம்மைப் பாதுகாத்துக் கொள்ள இயலும் என அன்புடன் கேட்டுக்கொள்வதோடு, அங்கே நம் சிறிய குழந்தைகளை தனியாக வெளியே செல்வதையும், விளையாட‌ விடுவதையும் தயவுகூர்ந்து தவிர்த்து பாதுகாப்புடன் இருக்கும்படி வனத்துறையின் சார்பில் பணிவோடு கேட்டுக் கொள்கிறோம். வீடுகளைச் சுற்றிலும் புதர்கள் மண்டியிருப்பதை அகற்றி வெளிச்சத்தோடு இருக்கும்படி வைத்துக் கொள்ளவும்.

சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளைப் பார்க்கும் ஆவலில் அவைகளை உணவு உண்ணவிடாமல் தொந்தரவு செய்வதும், அருகே சென்று புகைப்படங்கள் எடுப்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும், வனவிலங்குகள்‌ நடமாடும்‌ பகுதிகளில் தேவையில்லாமல் நடந்து சென்று வேடிக்கை பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகள் வெளியே வனவிலங்குகளைக் காணச் செல்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். அதை சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகள் உறுதி செய்து கொண்டு வனத்துறைக்கு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

அத்தியாவசியத் தேவைக்காக‌ வெளியே வரும்போது கையில் தடியும், டார்ச் லைட்டையும்‌ மறக்காமல் எடுத்துச்‌செல்லவும். அவை உங்களைப் பாதுகாப்பதில் உதவியாக இருக்கும்'' என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...