கோவில், வணிக நிறுவனங்களைத் தொடர்ந்து மக்கள் அதிகம் கூடும் முக்கிய வீதிகளை அடைக்க கோவை மாவட்ட நிர்வாகம் முடிவு!

கோவை: கோவையில் கோவில், வணிக நிறுவனங்களைத் தொடர்ந்து மக்கள் அதிகம் கூடும் பூங்காங்கள், முக்கிய வீதிகளை அடைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் கோவில், வணிக நிறுவனங்களைத் தொடர்ந்து மக்கள் அதிகம் கூடும் பூங்காங்கள், முக்கிய வீதிகளை அடைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா ஆகிய நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சமீரண் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் இன்று முதல் எட்டாம் தேதி வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.



அதன்படி துண்டுப்பிரசுரங்கள், விழிப்புணர்வு நாடகங்கள், மீம்ஸ் கிரியேட் தயாரிப்பது, கொரோவிலிருந்து தற்காத்துக்கொள்ளுவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

இதேபோல், தனியார் மருத்துவமனை, வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் நேரடியாகச் சென்று கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். கோவை மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலாகிறது.

அத்தியாவசிய பொருட்களைத் தவிரப் பிற கடைகள் காலை 10 மணி முதல் 5 மணி வரை செயல்படும். உணவகங்களில் மாலை 5 மணி வரை மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதி அதற்கு மேல் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய பொருட்கள் கடைகளைத் தவிரப் பிற கடைகள் இயங்க அனுமதி இல்லை. மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களிலிருந்து கோவைக்கு வருவோர் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்து இருக்க வேண்டும்.

அல்லது இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்திய சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அப்போது மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர். அவ்வாறு கொரோனா பரிசோதனை சான்றுகளோடு வராதவர்களுக்கு எல்லையிலேயே பரிசோதனை செய்யப்படும்.

அவர்களது செல்போன் எண்ணைக் கொண்டு கண்காணிக்கப் படுவார்கள். உலக அளவில் கொரோனா தொற்று அலையலையாகத் தான் கூடிக் குறைகிறது. கட்டுப்பாடுகள் அதிகரிக்கும் போது பாதிப்பு குறைகிறது. பின்னர் மீண்டும் மெல்ல அதிகரிக்கிறது.

அதேபோல் மக்களும் முகவசம் அணியாமல் இருப்பது பொது இடங்களில் கூடுவதும் ஒரு காரணமாக உள்ளது. கோவை மாவட்டத்தில் மக்கள் (ஜீரோ பிரிவிலென்ஸ்) நோய் எதிர்ப்புத் திறன் பரிசோதனையில் 40 சதவீதத்திற்கும் குறைவான அளவே உள்ளது.

எனவே பாதிப்புகள் இல்லாதவர்கள் அதிகம் உள்ளதால் தடுப்பூசி மூலம் தடுக்கலாம். எனவே தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் துவங்கி உடனே கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள் கோவில்கள் மேலும் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் பூங்காக்களைக் கண்டறிந்து அவற்றை மூடும் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளோம். ஒருசில வீதிகளில் மக்கள் அதிகமாகக் கூடுகின்றனர்.

பலமுறை எச்சரித்தும் கூடுவதால் அவற்றைத் தடுக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கட்டுப்பாடுகளை மீறினால் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தொடர்ந்து அதே நிலை நீடித்தால் கடைக்குச் சீல் வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கோவை விமான நிலையம் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது. வாளையாறு பகுதியில் ஒருவழிச் சாலையில் வாகனங்களை இயக்குவதைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தகவல் கூறி உள்ளோம்.

உடனடியாக அவை அடைக்கப்படும். கோவை மாவட்டத்தில் பாதிப்பு அதிகமாக இருந்த நேரத்தில் 9000 வரை தொடர பரிசோதனையானது செய்யப்பட்டது.

இந்த பரிசோதனை அளவு மெல்ல மெல்லக் குறைக்கப்பட்ட வந்த நிலையில் மீண்டும் ஒரு நாள் அதிகரித்து வருவதால் தினசரி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...