ஆனைமலையில் அம்பேத்கர் தோட்ட மக்கள் சங்கம் ஆலோசனை கூட்டம்!

கோவை: ஆனைமலை அம்பேத்கர் தோட்ட மக்கள் சங்கம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


கோவை: ஆனைமலை அம்பேத்கர் தோட்ட மக்கள் சங்கம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆனைமலை அம்பேத்கர் தோட்ட மக்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வால்பாறைசங்க அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குச் சட்டமன்றத் தொகுதி செயலாளர் வீரமணி தலைமை வகித்தார்.

மாநில துணைப் பொதுச் செயலாளர் கேசவ முருகன் முன்னிலை வகித்தார். நகரச் செயலாளர் வேல்முருகன் வரவேற்புரை அளித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு சிறப்புரையாற்றினார்.

அப்போது உங்களுடைய கோரிக்கையைச் சட்டமன்றத்துக்கு எடுத்துச் சென்று முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று தக்க நடவடிக்கை எடுக்கப் பாடுபடுவேன் என்று உறுதி அளித்தார்.



இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் பாரிவேந்தர் சிறப்புரையாற்றினார். அப்போது உங்களுடைய துயரங்கள் அனைத்தையும் நேரில் பார்த்தோம். உங்களுடைய சம்பள உயர்வு உட்பட பல்வேறு விஷயங்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் தேயிலைத் தோட்டங்களில் 50 ஆண்டுகளாக வசித்து வருபவர்களுக்கு அவர்கள் வசிக்கும் வீடுகளை அவர்களுக்கே பட்டா வழங்கச் சட்டமன்றத்தில் பேசி நடவடிக்கை எடுக்கக் கோரி கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நகர இணைப் பொதுச் செயலாளர் ஆண்டன் நல்லமுத்து, சங்க துணைத்தலைவர் அமுல்ராஜ், ஜெய்சங்கர்,மகளிர் பொறுப்பாளர்கள் சாவித்திரி, ராஜேஸ்வரி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...