திருப்பூர்: கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை முடிந்துவிட்டதாக பொது மக்கள் அலட்சியமாக செயல்படவேண்டாம். தமிழக அரசின் வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் கொரோனா உதவி மையம் இன்று திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் ஆகியோர் கலந்துகொண்டு உதவி மையத்தை திறந்து வைத்து பொதுமக்கள் மற்றும் சந்தைப் பகுதியில் உள்ள வணிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன் கட்டாய கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர், சுகாதாரத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதோடு மூன்றாவது அலை பரவாது தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் அதிகளவில் கூடும் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டு முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு முகக் கவசம் அளிப்பதோடு, தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், கொரோனா இரண்டாவது அலை முடிந்துவிட்டதாகவும் ஊரடங்கு இல்லை என பொதுமக்கள் அலட்சியம் கொள்ளாமல் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்காக தளர்வுகள் அளிக்கப்பட்டு இருப்பதை உணர்ந்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அதேபோல், வியாபாரிகளும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு முன்பதிவு அடிப்படையில் கடை இயங்கும் நேரத்தை தெரிவித்து பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.