கோவை: லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் (எல்எம்டபிள்யூ) நடத்தும் டிஜே நினைவு புகைப்பட போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. சிறந்த புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, திறமையானவர்கள் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.
கோவை: லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் (எல்எம்டபிள்யூ) நடத்தும் டிஜே நினைவு புகைப்பட போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. சிறந்த புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, திறமையானவர்கள் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.
டிஜே நினைவு புகைப்பட போட்டி, லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் டி ஜெயவர்த்தனவேலு (DJ) நினைவாக நிறுவப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. டாக்டர் டிஜே புகைப்பட விருப்பத்தின் நினைவாக இது கொண்டாடப்படுகிறது.
புகைப்பட போட்டியின் முதலாவது பதிப்பு 2012 ல் நடந்தது. இதற்கு கிடைத்த நல்ல வரவேற்பையடுத்து, தற்போது 10 வது பதிப்பாக நடத்தப்பட்டுள்ளது. இந்த முறை ஆன்லைன் முறையில் நடந்தது. டிஜே நினைவு புகைப்பட போட்டிக்கு இந்த ஆண்டும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இது மேம்பட்டு வருவதோடு, குறிப்பிட்ட காலத்தில் நடக்கும் மாபெரும் ஆண்டு நிகழ்வாக கருதப்படுகிறது.
போட்டிக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு இந்த ஆண்டு 2021 மே 1 முதல் ஜூன் 30 வரை பதிவுகள் www.djmpc.in வாயிலாக மேற்கொள்ளப்பட்டன. ஊட்டியைச் சேர்ந்த இக்பால் முகமது, சென்னையைச் சேர்ந்த ராதிகா ராமசாமி, வால்பாறையைச் சேர்ந்த திவ்யா, உள்ளிட்டோர் நடுவர்களாக செயல்பட்டு புகைப்படங்களை தேர்வு செய்தனர். இப்போட்டியின் நிர்வாகியாக கே. மருதாச்சலம் செயல்பட்டார்.
இந்த ஆண்டு நடத்த டிஜேஎம்பிசி 2021 புகைப்பட போட்டியில் 8,617படங்கள், உலகம் முழுவதும் 39 நாடுகளிலிருந்து 2040 பேர் பங்கேற்றனர்.
இந்த ஆண்டு இயற்கையின் படைப்பு மற்றும் சூரிய உதயம்/சூரிய அஸ்தமனம் என வகைப்படுத்தப்பட்ட படங்கள் இடம் பெற்றன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அடுத்த 10 இடங்களை பெற்ற பங்கேற்பாளர்களுக்கு விருதகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த போட்டியின் மொத்தபரிசு தொகை10 லட்சம் ரூபாய்.
இந்த ஆண்டு பரிசளிப்பு விழா ஆன்லைன் முறையில் நடந்தது. இதன் பரிசளிப்பு, விருது வழங்கும் விழா நேற்று (ஜூலை 30) ஆன்லைனில் நடந்தது. லட்சுமி மெஷின் ஒர்க்ஸ், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு, பரிசுகள் வென்றோரை வாழ்த்தினார்.
மேலும் விபரங்களுக்கு: www.djmpc.in என்ற இணையத்தள முகவரியை பார்வையிடலாம்.