கோவை: பொள்ளாச்சியில் பல்வேறு பகுதிகளில் இரு சக்கர வாகனங்களைத் திருடி விற்பனை செய்து வந்த நபரைக் கிழக்கு காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.

பொள்ளாச்சி கோட்டூர் ரோடு மேம்பாலம் அருகே நேற்று, கிழக்கு காவல் நிலைய காவல்துறை வாகன தணிக்கை மேற்கொண்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்குறிய வகையில் வந்த நபரைப் பிடித்து விசாரணை செய்ததில், அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்தார்.
இதையடுத்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், அவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த் (39) என்பதும், இவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட நகர்ப்பகுதிகளில், இரு சக்கர வாகனங்களைத் திருடி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடம் இருந்து மூன்று இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்த, கிழக்கு காவல் நிலைய காவல்துறை, அவர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.