கோவை காந்திபுரம் பகுதியில் ஸ்ட்ரோமிங் ஆபரேஷனில் ஈடுபட்ட  போலீசார்; குற்றவாளிகள் கைது.

கோவை காந்திபுரம் பகுதியில் ஸ்ட்ரோமிங் ஆபரேஷனில்  போலீசார் ஈடுபட்டனர். சோதனையில், பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட நபர்கள் கைது.



கோவை: கோவை காந்திபுரம், காட்டூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் மாலை 5 மணியில் இருந்து 7.30 மணி வரை பல்வேறு குழுக்களாகப் பிரிந்து "ஸ்ட்ரோமிங்" ஆபரேஷனில் போலீசார் ஈடுபட்டனர். அதில், பல்வேறு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இன்று 31.07. 2021 ஆம் தேதி கோவை மாநகர காவல் ஆணையாளர், உத்தரவின்படி கோவை மாநகர துணை ஆணையர் தலைமையில், சி1 காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் மற்றும் சட்ட விரோத செயல்களை தடுக்கும் வண்ணம் காந்திபுரம் பகுதியில் ஸ்ட்ரோமிங் ஆபரேஷன் நடைபெற்றது. 

அப்பகுதியில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள், நகரின் முக்கியமான பகுதிகள் என எட்டு இடங்களில் வாகன தணிக்கைகள் மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தல், பழைய குற்றவாளிகள், கெட்ட நடத்தை உள்ளவர்களை தணிக்கை செய்தல், சட்டவிரோதமாக ஸ்பா வைத்து நடத்துவதை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தல், மற்றும் இருசக்கர வாகனம் திருடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தல் ஆகிய பணிகளில் மூன்று காவல் உதவி ஆணையர்கள், ஐந்து காவல் ஆய்வாளர்கள், 10 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 130 காவலர்கள் அடங்கிய குழுவினர், அதி தீவிர ரோந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். 



இன்று மாலை 5.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை நடத்தப்பட்ட இந்த சிறப்பு ரோந்து கண்காணிப்பில்,மோட்டார் வாகன சிறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும், 

இருசக்கர வாகன ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டநபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.



இந்த தீவிர கண்காணிப்பு தொடர்ந்து நடைபெறும் என கோவை மாநகர காவல்துறை சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...