24 மணி நேரத்துக்குள் குற்றவாளியை கண்டுபிடித்த காவலர்களுக்கு கோவை எஸ்.பி சான்றிதழ் வழங்கி பாராட்டு.

:24 மணி நேரத்துக்குள் குற்றவாளியை கண்டுபிடித்த காவலர்களுக்கு கோவை எஸ்.பி சான்றிதழ் வழங்கி பாராட்டு.


கோவை: கோவை மாவட்டம் ,சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடையை உடைத்து செல்போனை திருடிய குற்றவாளியை, 24 மணி நேரத்துக்குள் கண்டுபிடித்த காவலர்களை கோவை மாவட்ட எஸ்.பி நேரில் அழைத்து, பாராட்டி உள்ளார். 

கோவை மாவட்டம் ,சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்னம்பாளையம் பகுதியில் வசிக்கும் கந்தசாமி என்பவர் சொந்தமாக செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 29.07.2021 அன்று இரவு கந்தசாமி அவரது கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள், கந்தசாமி அவரது கடைக்கு சென்று பார்த்தபோது கடையை அடையாளம் தெரியாத நபர் உடைத்து கடையில் இருந்த ரூபாய் 10,499 /- மதிப்புள்ள செல்போனை திருடிச் சென்றுள்ளார். 

இது சம்பந்தமாக அவர், சூலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், சூலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், 24 மணி நேரத்திற்குள் செல்போனை திருடிய நபரை கண்டுபிடித்து, கைது செய்துள்ளனர். 



துரிதமாக செயல்பட்ட காவலர்களைஊக்குவிக்கும் வகையில், கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், இன்று மாவட்டக் காவல் அலுவலகத்திற்கு, உதவி ஆய்வாளர், ராஜேந்திர பிரசாத், சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், காவலர்கள் ரஞ்சித் குமார் (PC 880), பூபாலன் (PC 1008), ரவி (PC 594), ஆயுதப்படை காவலர் தினேஷ்குமார் (PC 625) மற்றும் ஊர்க்காவல் படை காவல் துறை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் விஜய் ஆகியோரை அழைத்து, பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...