கோவையில் 4 நாட்களுக்கு முக்கிய கோவில்களில் தரிசனம் செய்ய தடை - ஆட்சியர் சமீரன் அறிவிப்பு.

கோவை: கோவையில் 4 நாட்களுக்கு கோவில்களில் தரிசனம் செய்ய தடை. ஆற்றோரங்களில் திதி, தர்ப்பனம் செய்யவும் அனுமதி மறுப்பு, ஆட்சியர் சமீரன் அறிவிப்பு.



கோவை: கோவை மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா நோய்த் தொற்று சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும், தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறை அடிப்படைகளிலும், கோவையில் 4 நாட்களுக்கு முக்கிய கோவில்களில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இம்மாதம் 2ம் தேதி ஆடி கிருத்திகை, 3ம் தேதி ஆடி பெருக்கு பண்டிகை, மற்றும் 8ம் தேதி ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் நடைபெறும் விழாக்களை முன்னிட்டு அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

அதன்படி, மருதமலையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், பேரூர் அருள்மிகு பட்டிஸ்வர சுவாமி திருக்கோயில், பொள்ளாச்சி ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி அருள்மிகு வன பத்ரகாளியம்மன் திருக்கோயில்களில் 1ம் தேதிமுதல் 3ம் தேதி வரையும் மற்றும் 8ம் தேதியும் நான்கு நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்யவும், ஆற்றோரங்களில் திதி மற்றும் தர்ப்பனம் செய்யவும் அனுமதி இல்லை . 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...