கிணத்துக்கடவு அருகே தென்னை நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - ரூ. 5 லட்சம் மதிப்பிலான தென்னை நார் கருகி நாசம்!

கோவை: கிணத்துக்கடவு அருகே தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான தென்னை நார் கருகி நாசமானது.


கோவை: கிணத்துக்கடவு அருகே தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான தென்னை நார் கருகி நாசமானது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள முஸ்லிம் கோவில்பாளையத்தில் செந்தில் அரசு என்பவருக்கு சொந்தமான தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது.

இந்த தொழிற்சாலையில் இன்று மதியம் தென்னை நார் குவிக்கப்பட்டிருந்த இடத்தில் மின்சார கம்பி மீது தென்னை மரம் உடைந்து விழுந்ததில் அதில் ஏற்பட்ட தீப்பொறியால் தென்னை நாரில் தீ பற்றி எரிய தொடங்கியது.



இதையடுத்து, தீ எரிவதை கண்டு தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், காற்று பலமாக வீசியதால் அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த தென்னை நாரிலும் பற்றி எரியத் தொடங்கியது.

பின்னர், பொள்ளாச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 3 மணி நேரம் மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



காற்று அதிகமாக வீசுவதால் தென்னை நார்களில் ஏற்பட்ட தீயிலிருந்து புகைமூட்டம் அதிகளவு இருந்ததால் மூச்சுத்திணறல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கிணத்துக்கடவு காவல் துறையினர், தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...