வால்பாறையில் பருவமழை காரணமாக காப்பி உற்பத்தி அதிகரிப்பு!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் 50,000 ஏக்கர் பரப்பளவில் தேயிலைத் தோட்டங்களும் சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் காப்பித் தோட்டங்களும் உள்ளன.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் 50,000 ஏக்கர் பரப்பளவில் தேயிலைத் தோட்டங்களும் சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் காப்பித் தோட்டங்களும் உள்ளன.

கடந்த மாதம் காப்பித் தோட்டங்களில் தென்மேற்குப் பருவமழை துவங்குவதற்கு முன் பூக்கள் உண்டாகி காய்களாக மாறின.மேலும் காப்பித் தோட்ட நிர்வாகங்களும் காப்பி செடிகளுக்குத் தேவையான உரங்கள் மருந்துகளை அடித்துப் பராமரித்து வந்தன.

இந்நிலையில், தென்மேற்கு பருவமழை கடந்த ஒரு மாத காலமாகத் தொடங்கிப் பெய்து வந்த காரணத்தினால் காப்பி செடியில் உள்ள காய்கள் அனைத்தும் நன்கு முற்றி வளர்ந்துள்ளன.

இதன் காரணமாக இந்த ஆண்டு காபி செடியில் அதிகப் படியான பழங்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர்களுக்கு உரம் போடுதல் மருந்து அடித்தல் கிளை ஒடித்தல் போன்ற ஏராளமான பணிகள் கிடைப்பதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...