கேரள மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகரிப்பு... பொள்ளாச்சியை அடுத்த தமிழக கேரள எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த கோரிக்கை..!

கோவை: கேரள மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், பொள்ளாச்சியை அடுத்த தமிழக கேரள எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கேரள மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், பொள்ளாச்சியை அடுத்த தமிழக கேரள எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரளா மாநிலத்தில் தினசரி கொரோனா பெருந்தொற்று பாதிப்பு என்பது 20 ஆயிரத்தை கடந்து விட்டது. இந்தநிலையில், தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

குறிப்பாக, கேரளாவை ஒட்டியுள்ள கோவை மாவட்டம், பொள்ளாச்சி, கோவிந்தாபுரம், கோபாலபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட 13 சோதனைச் சாவடிகள் உள்ளன.

அனைத்து சோதனைச் சாவடிகளிலும் போலீஸார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இ-பதிவு உள்ள வாகனங்களை மட்டுமே தமிழகத்தில் அனுமதித்து வருகின்றனர்.

அதேபோல் மருத்துவக் குழுவினர் முகாமிட்டு கேரள மாநிலத்தில் இருந்து வருபவர்களை உடல் வெப்ப பரிசோதனை செய்து உரிய ஆவணங்கள் கொண்டுவந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

தற்போது கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருவதால், இரு மாநிலப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். மாநில எல்லைகளில் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...