வால்பாறை அருகே கேரளா செல்லும் பழுதடைந்த சாலையை திருச்சூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

கோவை: கேரளா மாநிலம் மலுக்கப்பாறை சாலக்குடி சாலை மழையால் துண்டிக்கப்பட்டத்தை திருச்சூர் மாவட்டம் ஆட்சியர் ஆய்வு செய்தார்.


கோவை: கேரளா மாநிலம் மலுக்கப்பாறை சாலக்குடி சாலை மழையால் துண்டிக்கப்பட்டத்தை திருச்சூர் மாவட்டம் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் மலுக்கப்பாறை எஸ்டேட் பகுதியில் உள்ள மக்கள் மலுக்கப்பாறை சாலக்குடி சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதியைக் காண சுற்றுலா பயணிகள் அதிக அளவு வந்து செல்ல வால்பாறை மலுக்கப்பாறை சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அதிக மழை காரணமாக மலுக்கப்பாறை சாலக்குடி சாலை மழையால் சேதமடைந்துள்ளது. இதனால் யாரும் பயன்படுத்த முடியாமல் உள்ளது.



குறிப்பாக, வால்பாறையில் இருந்து கேரளா மாநிலம் மலுக்கப்பாறை சாலக்குடி செல்லும் வழியில் உள்ள 10 அடி பாலம் சாந்தன் பாறை என்னும் இடத்தில் மழையால் மண் சரிவு ஏற்பட்டு சாலை இடிந்து விழுந்ததால் இவ்வழியாக இவ்வித வாகனம் செல்ல முடியாத அளவு பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், இதை அறிந்த திருச்சூர் மாவட்ட ஆட்சியர் ஹரிதா வி குமார் மற்றும் அவருடன் சென்ற குழுவினர் மேற்படி இடத்தை ஆய்வு செய்தனர்.

பின்னர் ஒப்பந்ததாரரிடம் மூன்று தினங்களில் இந்த சாலையை சரி செய்ய வேண்டும், குறைந்தபட்சம் சிறு வாகனங்கள் செல்லும் அளவுக்காவது சாலையை சரி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.



மேலும், மலுக்கப்பாறை தேயிலை தோட்டம் தொழிலாளர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்ல எஸ்டேட் ஆம்புலன்ஸ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, துணை ஆட்சியர் sufiaan ahemad, மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் pk டேவிட் மஷ்டர் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...