கோவை காதி கிராப்ட்டில் நள்ளிரவில் திருட்டு; ரூ. 6 லட்சம் மதிப்பிலான சேலைகள் மாயம்.

கோவையில் தமிழக அரசுக்கு சொந்தமான காதிகிராப்ட்டில் நள்ளிரவில் கொள்ளையர்கள் புகுந்து ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான சேலைகளை திருடி சென்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவையில் தமிழக அரசுக்கு சொந்தமான காதிகிராப்ட்டில் நள்ளிரவில் கொள்ளையர்கள் புகுந்து ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான சேலைகளை திருடி சென்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை உப்பிலிபாளையம் அவிநாசி மேம்பாலத்திற்கு அடியில் அரசுக்கு சொந்தமான காதிகிராப்ட் என்று சொல்லக்கூடிய அரசு விற்பனை செயல்பட்டு வருகிறது. இன்று, அங்கு பணியாற்றக்கூடிய ஊழியர்கள் வழக்கம் போல காலையில் வேலைக்கு வந்தவர்கள், முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது சேலைகள் வைத்துள்ள பகுதி அலங்கோலமாக கிடந்துள்ளது. இதுகுறித்து, அவர்கள் உடனே ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான சேலைகள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.

திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த, காதிகிராப்ட்டிற்கு பின்புறம் பழைய கோர்ட் உள்ளது. அந்தப் பகுதி யாரும் பயன்படுத்தாமல் பாழடைந்து கிடப்பதை பயன்படுத்தி, இரவு நேரங்களில், மது அருந்துவது, போதை வஸ்துக்கள் பயன்படுத்தி வருவது போன்ற சட்டவிரோத செயல்கள் அங்கு நடப்பது வாடிக்கை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

எனவே, அந்தப் பகுதிக்கு அடிக்கடி வந்து செல்லக்கூடிய சமூக விரோதிகளுக்கு இந்த திருட்டு சம்பவங்களில் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...