கோவை மாவட்ட ஆட்சியரை மிரட்டிய அதிமுக எம்எல்ஏக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்!

கோவை: மனுக்கள் அளிக்க வந்தபோது, கோவை மாவட்ட ஆட்சியரை மிரட்டிய அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


கோவை: மனுக்கள் அளிக்க வந்தபோது, கோவை மாவட்ட ஆட்சியரை மிரட்டிய அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அரசு ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிக்க வந்துவிட்டு, அவர் அமர்ந்து கொண்டு மனுக்களைப் பெற்றார் என்கிற காரணத்திற்காக கடுமையான வார்த்தைகளை பிரயோகித்து மிரட்டிய செயலுக்கு அரசு ஊழியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிமுகவினர் கடந்த பத்தாண்டு காலமாக அதிகாரத்தில் இருந்தபோது மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு ஊழியர்களை எவ்வாறு நடத்தினார்கள் என்பதை ஊரறியும் உலகறியும். அங்கன்வாடி ஊழியர்களை நியமிப்பது துவங்கி, துப்புரவு பணியாளர்களை நியமிப்பது வரை அனைத்திலும் ஊழல் செய்வதற்காக தாங்கள் சொல்வதே சட்டம் என்று செயல்பட்டனர்.

அரசு ஊழியர்கள் தங்கள் கடமைகளை செய்வதற்கே அதிமுகவின் அசைவுக்கேற்ற செயல்பட வேண்டிய துர்பாக்கிய நிலை இருந்தது. இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கையின் காரணமாகத்தான் அதிமுக ஆட்சியை மக்கள் நிராகரித்து திமுகவை அரியணையில் ஏற்றியுள்ளனர். இதனை இப்போதும் உணராமல் அதே அதிகார மமதையோடு அதிமுக எம்எல்ஏக்கள் நடந்து கொள்வது முகச்சுளிப்பையும், மக்களிடம் இருந்து மேலும் அந்நியப்படுதலையுமே உருவாக்கும்.

இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியரை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் மிரட்டும் தொனியில் பேசிய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மரியாதை என்பது கேட்டு வாங்குவது அல்ல, இயல்பாக கிடைக்க வேண்டியது என்பதை அதிமுக எம்எல்ஏக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கோவை மாவட்ட ஆட்சித்தலைவரின் கண்ணியத்தை களங்கப்படுத்தும் வகையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நடந்து கொண்டதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட சங்கம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. இது தற்செயலாக நடந்த நிகழ்வு என அலட்சியப்படுத்த முடியாது. கடந்த காலத்தில் இவர்களின் நடவடிக்கை தற்போதும் தொடர்கிறது என்றே பார்க்க வேண்டியுள்ளது. மாவட்ட ஆட்சியரிடமே இப்படித்தான் இவர்கள் நடந்து கொள்வார்கள் என்றால் சாதாரண கடைநிலை ஊழியர்களின் நிலை குறித்த அச்சம் எழுகிறது.

அரசு ஊழியர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகாமல், நேர்மையாக சட்ட விதிகளின்படி பணியாற்ற மக்களுக்கான திட்டங்களை தடையின்றி மேற்கொள்ள வேண்டும். ஆகவே, மாவட்ட ஆட்சியரை அவமரியாதையாக பேசிய போது அங்கிருந்த அரசு ஊழியர்களை கொண்டு அதிமுக எம்எல்ஏக்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும்.

மேலும், தமிழக முதலமைச்சரும் அரசு ஊழியர்களின் பாதுகாப்பை உணர்ந்து சம்பந்தப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் மீது உரிந நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோவை மாவட்ட அரசு ஊழியர் சங்கம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...