கோவையில் வாடகை வீடு எடுத்து வெளிமாநில பெண்களை வைத்து விபச்சாரம்: இருவர் கைது, ஒரு பெண் மீட்பு

கோவை: கோவையில் விபசாரத் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது. இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொண்ட போலீஸார், விபசாரத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களைக் கைது செய்தனர். ஒரு பெண்ணை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.


கோவை: கோவையில் விபசாரத் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது. இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொண்ட போலீஸார், விபசாரத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களைக் கைது செய்தனர். ஒரு பெண்ணை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

கோவையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து விபசாரத்தில் ஈடுபடக் கூடியவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதில் குறிப்பாக பல்வேறு இடங்களில், லாட்ஜுகளில், வீடுகளில், மசாஜ் சென்டர் என்ற பெயரில் வாடகைக்கு எடுத்து வெளிமாநிலங்களில் இருந்து பெண்களைக் கொண்டு வந்து விபசாரத்தில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. தொடர்ந்து போலீஸாரும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து கைது செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், இன்று செல்வபுரம் பகுதியில் வீட்டில் வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட ஒரு பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்துக்கு அனுப்பப்பட்டனர். இரண்டு பெண்களை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- ‘‘செல்வபுரம் அமுல் நகர் பகுதியில் வீட்டில் விபசாரம் நடைபெறுவதாக செல்வபுரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதாக செல்வபுரம் அமுல் நகர் பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண் மற்றும் சுகுணாபுரம் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அங்கு விபசாரத்திற்காக தங்கியிருந்த உக்கடம் பகுதியைச் சேர்ந்த 34 வயது பெண்ணை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...