கோவையில் பிரியாணியில் மயக்க மருந்து கொடுத்து பெண்ணை ஆபாசமாக படம்பிடித்து மிரட்டல்; ரூ.1.4 கோடி மோசடி

கோவை: கோவையில் ஒரு பெண்ணிடம் சேர்ந்து தொழில் தொடங்கலாம் என 1.4 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்தது. அவர் வீட்டிற்குச் சென்று பிரியாணியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து. அவரை கற்பழித்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விடுவதாக மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் ஒரு பெண்ணிடம் சேர்ந்து தொழில் தொடங்கலாம் என 1.4 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்தது. அவர் வீட்டிற்குச் சென்று பிரியாணியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து. அவரை கற்பழித்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விடுவதாக மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்துள்ளார்.

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் முதல்வரின் தனிப்பரிவு மற்றும் கோவை மாநகர காவல் துறை ஆணையருக்கு மனு ஒன்றை அளித்துள்ளார். இந்தநிலையில், தாம் ஏமாற்றபட்டுள்ளதால் நீதி கிடைக்க மனு வழங்கியுள்ளதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘பல்லடம் சுக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெயராம் என்பவரின் மகனான ஜெயகாந்தன், விசைத்தறி தொழிலில் முதலீடு செய்து நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என கூறி என்னிடம் இரண்டு தவணைகளாக ரூபாய் ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து எனது வீட்டிற்கு வந்த ஜெயகாந்தன் பிரியாணியில் மயக்க மருந்து கலந்து என்னிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதோடு அதனை வீடியோ மற்றும் படங்கள் எடுத்து மிரட்டு வருகிறார். மேலும், எனது பணத்தைத் திரும்பக் கேட்டபோது, என்னுடைய ஆபாச வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவேன் என அவருடைய நண்பர் நடராஜனுடன் சேர்ந்து மிரட்டுகிறார்'' என்று தெரிவித்தார். மேலும், இதுபோன்று பல பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கும் ஜெயகாந்தன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். பெண்களுக்கு எதிராக கோவை மாவட்டத்தில் தொடர்ந்து பணம் மோசடி பாலியல் தொந்தரவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவை மேலும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...