கோவையில் நிதி நிறுவனம் நடத்தி இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி, 50 லட்சம் ரூபாய் வரை மோசடி!

கோவை: நிதி நிறுவனம் நடத்தி இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி, 50 லட்சம் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறை கைது செய்தனர்.


கோவை: நிதி நிறுவனம் நடத்தி இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி, 50 லட்சம் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறை கைது செய்தனர்.

கோவையில் தொடரும் நிதி நிறுவன மோசடி, மக்களின் ஆசையைத் தூண்டி ஏழை எளிய மக்களைத் தொடர்ந்து வதைக்கும் போலி நிறுவன மோசடி ஆசாமிகள். இது வரை கோயம்புத்தூரில் பாசி ஊழல் தொடங்கி ஈமு கோழி வரை பல கோடி ரூபாயைப் பொதுமக்கள் குறுக்கு வழியில் அதிக வட்டியுடன் பணம் சம்பாதிப்பதற்காகக் கவர்ச்சிகரமான திட்டங்களை நம்பி பணத்தைப் போட்டுத் தொடர்ந்து கோவை மக்கள் ஏமாந்த வண்ணம் உள்ளனர்.

இதில் ஓய்வு பெற்று மகள் திருமணத்திற்கு வைத்திருந்த பணத்தை முதலீடு செய்தவர்கள், ஆடு மாடுகளை விற்று பணத்தை முதலீடு செய்தவர்கள், குழந்தைகள் கல்விக்காகச் சேர்த்து வைத்த பணத்தை முதலீடு செய்தவர்கள் என இப்படியாகத் தொடர்கிறது.

கோவை, பீளமேடு சிவகாமி 'லே - அவுட்' பகுதியைச் சேர்ந்தவர் ரிதுவர்ணன், 37. இவர் கடந்த மார்ச் முதல், நிதி நிறுவனம் நடத்தி வந்தார். ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், தினமும் வட்டி பணம் அல்லது இரட்டிப்பு பணம் தருவதாக அறிவித்தார்.

இதை நம்பி பலரும் அவரது நிறுவனத்தில் முதலீடு செய்தனர். பிற முதலீட்டாளர்களை அழைத்து வந்தால், அதற்குரிய கமிஷன் தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

கோவை ஆவாரம் பாளையம் துரைசாமி லே - அவுட்டை சேர்ந்த கேசவன், 23, என்பவர், 1.25 லட்சம் ரூபாயைக் கடந்த ஜூலை மாதம் முதலீடு செய்தார். ஆனால், முதலீட்டுக்கான வட்டிப்பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை. இது குறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவில், கேசவன் புகார் அளித்தார்.

காவல்துறை நடத்திய விசாரணையில், பலரிடம், 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரிந்தது. இதையடுத்து நிறுவனத்தின் உரிமையாளர்களான ரிதுவர்ணன், ஸ்ரீஹரி, பாலமுருகன் ஆகிய மூவர் மீதும், காவல்துறை வழக்குப் பதிந்தனர். ரிதுவர்ணனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...