கோவை மேம்பாலத்தில் சீரியல் பார்த்தபடி ஆபத்தை உணராமல் பைக்கை ஓட்டிய நபர்; வீடியோ காட்சிகள் வெளியீடு

கோவை: கோவை காந்திபுரம் மேம்பாலத்தில், ஆபத்தை உணராமல் செல்போனில் சீரியல் பார்த்தபடி இருசக்கர வாகனத்தை ஓட்டிய நபரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.



கோவை: கோவை காந்திபுரம் மேம்பாலத்தில், ஆபத்தை உணராமல் செல்போனில் சீரியல் பார்த்தபடி இருசக்கர வாகனத்தை ஓட்டிய நபரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

செல்போனில் பேசியபடி வாகனங்களை இயக்குவதால் எண்ணற்ற விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்தாலும், வாகனம் ஓட்டும் போது செல்போனை பயன்படுத்துவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது என்பதே நிதர்சனம்.



இதற்கும் ஒருபடி மேலாக, கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் வாகன ஓட்டி ஒருவர் ஜாலியாக தனது செல்போனில் சீரியல் பார்த்து ரசித்தபடி இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கும் மனதை பதபதைக்க வைக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

யார் எந்த நபர்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...