கோவை: வால்பாறையில் கரடி தாக்கிய தேயிலைத் தோட்டத்தில் வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்.
கோவை: வால்பாறையில் கரடி தாக்கிய தேயிலைத் தோட்டத்தில் வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று முன்தினம் வில்லோனி தேயிலைத் தோட்டத்தில் கரடி தாக்கி தொழிலாளி மோகன்ராஜ் என்பவர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றது.
இந்நிலையில், நேற்று இரவு மீண்டும் ஒரு தொழிலாளியை கரடி தாக்கியுள்ளது. வால்பாறையை அடுத்த அய்யர்பாடி தேயிலை தோட்டத்தில் இரவு 11.20 மணியளவில் அய்யர்பாடி இரண்டாம் டிவிசனை சேர்ந்த வசந்த் பிரபாகரன் த /பெ ஆசிர்வாதம் (22), என்கிற தொழிலாளி கரடியால் தாக்கப்பட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சைக்குப்பின் மேல்சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் வால்பாறை பகுதியில் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கரடி தாக்கிய தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதியை ஆய்வு மேற்கொண்ட வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம், அங்குள்ள மக்களிடம் வனவிலங்குகளிடம் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது, மேலும் இரவு நேரங்களில் நடமாடுவதை தவிர்க்க அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் மற்றும் உதவி ஆய்வாளர் காவலர்கள், வனத்துறை ஊழியர்கள் இருந்தனர்.