கோவை: கோவை சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட ஹோப்காலேஜ் முதல் விளாங்குறிச்சி செல்லும் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவை: கோவை சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட ஹோப்காலேஜ் முதல் விளாங்குறிச்சி செல்லும் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் எம்எல்ஏ ஜெயராம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
கோவை சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட ஹோப்காலேஜ் முதல் விளாங்குறிச்சி செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடந்த ஆட்சியில் சிறப்பு சாலை திட்டத்தில் இதற்கு 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்க பூஜை போடப்பட்டது. தற்போது பணி ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொடீசியா முதல் தண்ணீர்பந்தல்(S - Bend) வரை பாதி பணிகள் நிறைவடைந்த நிலையில், அதுவும் தடைபட்டுள்ளது.. எனவே, பொதுமக்களின் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

SIHS காலனி ரயில்வே மேம்பால (LC-4) பணிகள் சர்வீஸ் ரோடு போடுவது தொடர்பாக வழக்கு நடைபெற்று வந்த காரணத்தால் பணிகள் நடைபெறாமல் தடைபட்டு இருந்தது. தற்போது வழக்கு முடிவடைந்து இருப்பதாக தெரிகிறது.
எனவே, உடனடியாக பணிகளை தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும் எனவும், மேலும், ஹோப் காலேஜ் முதல் விளாங்குறிச்சி செல்லும் சாலை( LC-6 ) ரயில்வே மேம்பாலப் பணிகள் வழக்கு நடைபெற்று வந்த காரணத்தால் பணிகள் நடைபெறாமல் தடைபட்டு இருந்தது. தற்போது வழக்கு முடிவடைந்து இருப்பதாக தெரிகிறது.
ஆகவே, இருபுறமும் சம அளவு சாலை அமைக்க நில உரிமையாளர்களை அழைத்துப் பேசி உரிய இழப்பீட்டு தொகையை வழங்கி, உடனடியாக பணிகளை தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.