வால்பாறையில் புலிகள் தின கொண்டாட்டம்: போட்டியில் வெற்றி பள்ளி குழந்தைகளுக்கு வனத்துறை சார்பில் பரிசுகள் விநியோகம்!

கோவை: வால்பாறையில் புலிகள் தினத்தை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வனத்துறையினர் பரிசுகள் வழங்கினார்.


கோவை: வால்பாறையில் புலிகள் தினத்தை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வனத்துறையினர் பரிசுகள் வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று புலிகள் தினம் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவி வருவதால் புலிகள் தினத்தை எளிமையான முறையில் கொண்டாட வேண்டும் என்று அரசு அறிவித்தது.

இந்நிலையில், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி, டாப்சிலிப், பொள்ளாச்சி போன்ற வனச்சரகத்துக்கு உட்பட இடங்களில் புலிகள் தினத்தை கொண்டாடும் வகையில், கடந்த 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை பள்ளி குழந்தைகளுக்கு வனவிலங்குகளை காப்பாற்றுவது, இயற்கையை காப்பாற்றுவது, புலிகள் குறித்து கட்டுரைகள், படங்கள், பாட்டுகள் போன்றவை குறித்து ஆன்லைன் மூலம் போட்டிகள் நடைபெற்றது.

இந்த போட்டியில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 198 பேர்கள் பங்குபெற்றனர். இதில் வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகத்தில் மட்டுமே 120 பேர்கள் பள்ளிக் குழந்தைகள் பங்கு பெற்றனர்.



இந்த நிலையில், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று புலிகள் தினம் கொண்டாடும் நிலையில், வால்பாறை மானாம்பள்ளி அலுவலகத்தில் 40 பேர்களுக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு மற்றும் ஆறுதல் பரிசு என்று பள்ளி குழந்தைகளுக்கு வழங்கினார்.



மேலும், வெற்றி பெற்ற மாணவர்களை மகிழ்விக்கும் விதமாக வனத்துறை சார்பில் உலாந்தி வன சரகத்தில் உள்ள யானைகள் வளர்ப்பு முகாமிற்கு அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் வால்பாறை வனச்சரக ஜெயச்சந்திரன், மானாம்பள்ளி வனச்சரக மணிகண்டன் மற்றும் வனவர்கள், வனக்காப்பாளர் பங்குபெற்றனர்.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...