கோவையில் விஸ்வரூபம் எடுக்கும் போதை ஊசி கலாச்சாரம்.. கஞ்சா மற்றும் மாத்திரைகளுடன் 3-வாலிபர்கள் கைது!

கோவை: கஞ்சா, போதை ஊசிகள் மற்றும் மாத்திரைகளுடன் கையும் களவுமாகச் சிக்கிய மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கஞ்சா, போதை ஊசிகள் மற்றும்மாத்திரைகளுடன் கையும் களவுமாகச் சிக்கிய மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை கஞ்சா பொட்டலங்கள் போதை மாத்திரைகளும் மற்றும் சிரஞ்சுகளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் முன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உக்கடம் பகுதியில் வலி நிவாரண மாத்திரை மற்றும் போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசியில் செலுத்தி அதை உடலில் செலுத்தும் வீடியோ கோவை நகர் உட்பட தமிழ்நாடு முழுவதும் அந்த வீடியோ வைரலாக பரவியது.

அதை தொடர்ந்து போதை பொருள் தடுப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில் ஆங்காங்கே கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்வது தொடர்ந்து வருகிறது.

அதை தொடர்ந்து அதை இளைஞர்கள் வாங்கி அதை தண்ணீரில் கரைத்து உடலில் செலுத்தி போதை அனுபவித்து வருகின்றன. தடுப்பதற்கு காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இருந்தாலும் அது குறைந்தபாடு இல்லாமல் உள்ளது. இந்த நிலையில் நேற்று கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இளைஞர்கள் பலர் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். அதுவும் குறிப்பாக வலிநிவாரணி மாத்திரைகளைத் தண்ணீரில் கலந்து சிரஞ்சி மூலம் செலுத்தி போதை அடையும் புதிய பழக்கத்தை செய்து வருகின்றனர்.

இதையடுத்து கோவை மாநகர போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இது போன்ற போதைப் பொருட்களை விற்கும் நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சிங்காநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒண்டிபுதூர் பகுதியில் காலி இடத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர்களை விசாரித்தனர்.

அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர் .மேலும் அவர்களிடம் சோதனை நடத்தியபோது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் போதை மாத்திரைகளும் மற்றும் சிரஞ்சுகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் புலியகுளம் அம்மன்குளம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மகன் முத்துக்குமார் (21) ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த டேனியல் ராஜ் என்பவரின் மகன் கோகுலகிருஷ்ணன் (21) மற்றும் ஒண்டிப்புதூர் வள்ளலார் அடுக்குமாடிக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகன் ராஜா என்கிற இஸ்ரவேல் (21) ஆகிய மூவரும் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் வலி நிவாரணி போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...