கோவை: பொள்ளாச்சி அருகே காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1050 கிலோ ரேஷன் அரிசி, காரை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1050 கிலோ ரேஷன் அரிசி, காரை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பகுதியில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியை கேரளா மாநிலத்திற்கு கடத்தப்படுவதாக கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவ்வழியாக வந்த சந்தேகத்துக்கிடமான காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது, அதில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 50 கிலோ எடை கொண்ட 21 பைகளில் இருந்த 1050 கிலோ ரேஷன் அரிசி மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், கடத்தலில் ஈடுபட்ட கேரள மாநிலம் சித்தூரைச் சேர்ந்த சரவணன், சுபாஷ் உள்ளிட்ட இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.