கோவையில் சாலை ஓரத்தில் படுத்திருந்த மாற்றுத்திறனாளி மீது கார் ஏறி பரிதாபமாக உயிரிழப்பு!

கோவை: கோவையில் சாலை ஓரத்தில் உறங்கிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி மீது கார் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: கோவையில் சாலை ஓரத்தில் உறங்கிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி மீது கார் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் வரதராஜ்(57). இவர் நேற்று மாலை கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள கீதா ஹால் சாலையில் காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, சாலையின் ஓரமாக படுத்திருந்த ஊனமுற்ற நபர் மீது கார் வேகமாக மோதியது. இதில் அந்த நபர் படுகாயமடைந்தார். இதையடுத்து வரதராஜ் காயமடைந்த நபரை தனது காரில் எடுத்துக் கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, கோவை கிழக்கு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கார் விபத்தில் இறந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் அதே பகுதியில் பல ஆண்டுகளாக தங்கியிருந்து பிச்சை எடுத்து வரும் ஊனமுற்ற நபர் என்பது தெரியவந்தது. மேலும் அவர் குறித்த எந்த விவரங்களும் தெரியவில்லை. இதுகுறித்து வரதராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...