கோவை: பொள்ளாச்சி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தவரை தாக்கிய வாலிபர் கைது.

பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இதயராஜ்(31). இவர் தனது வீட்டிலேயே சிறிய அளவில் சீட்டு நடத்தி வருகிறார். இந்தநிலையில், பொள்ளாச்சி பல்லடம் ரோடு பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மனைவி திலகவதி 1 லட்ச ரூபாய் சீட்டு மூலம் பணம் வாங்கியதாகத் தெரிகிறது. இதில் 5 ஆயிரம் ரூபாயை மட்டும் திலகவதி திருப்பிச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும் மீதமுள்ள 5 ஆயிரம் ரூபாயைத் திருப்பித் தராமல் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து இதயராஜ் பலமுறை கேட்டும் பணத்தை திருப்பித் தரவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில், இன்று இதயராஜ் பணத்தைத் திருப்பிக் கேட்ட பொழுது திலகவதியின் மகன் சிவராஜ்(35) இதயராஜை தகாத வார்த்தைகளைப் பேசியதோடு கைகளால் தாக்கியுள்ளார். இதுகுறித்து இதயராஜ் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார் சிவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.