கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு காவல்துறை மற்றும் நகராட்சி துறையினர் இணைந்து அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தேயிலைத் தோட்டப் பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் வால்பாறை நகருக்கு வந்து அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச் செல்வது வழக்கம். மேலும், கீழ்ப்பகுதியில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு வந்துள்ளனர். இதன் காரணமாக வால்பாறையில் ஏராளமான கூட்டம் கூடியுள்ளது.
மேலும், பெரும்பாலானோர் முகக் கவசம் அணியாமலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் உள்ளனர். இதனைத் தொடர்ந்து வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி உத்தரவிற்கிணங்க காவல் துறையினர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் இணைந்து முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.