கோவை: கோவை புறநகர் பகுதிகளில் ஒரே நாளில் 852 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 5 பேரை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநகாரத்தினம் இ.கா.ப., அவர்களின் அதிரடி உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி மற்றும் பொள்ளாச்சி உட்கோட்ட பகுதிகளில் காவல்துறையினர் நேற்று (23.07.2021) நடத்திய அதிரடி சோதனையில், கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதிகளில் சட்டத்திற்கு விரோதமாக 390 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்த ஹீரராம் மற்றும் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதிகளில் சட்டத்திற்கு விரோதமாக 132 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்த 1)சாதிக் 2)குணசேகரன் மற்றும் கோவில்பாளையம் காவல் நிலைய பகுதிகளில் சட்டத்திற்கு விரோதமாக 330 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்த 1)நரேன்லால், 2)அஜ்பரன் ஆகியோர்களை கைது செய்து மேற்படி வழக்குகளில் அவர்களிடமிருந்து மொத்தம் 852 கிலோ கிராம் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
அதேபோல, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவலை 7708100100 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியங்கள் காக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.