கோவை: வால்பாறையில் கனமழை பெய்து வருகிறது. மழையால் தேயிலை எடை போடும் நிறுவை செட் விழுந்து ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வந்தது. சில தினங்களாக கன மழையாக மாறி வருகிறது. வால்பாறையில் உள்ள ஆறுகள் அனைத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த கனமழையால் பொது மக்களும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். வால்பாறை அருகே மாணிக்கா எஸ்டேட் N C பிரிவு 35-வது தேயிலைத் தோட்டப் பகுதியில் தேயிலைப் பறிக்கும் தொழிலில் 20-க்கு மேற்பட்டவர்கள் வேலையில் ஈடுபட்டு வந்தனர்.
இன்று மாலை மூன்று மணி அளவில் தேயிலை இலைகளை ஒரு செட்டில் எடை போட்டுக் கொண்டு இருக்கும் பொழுது செட்டு உடைந்து விழுந்ததில் ஐந்து பேரின் தலை, கை, கால் போன்றவைகள் மேல் ஓடுகள் மரங்கள் விழுந்ததால் காயமடைந்தனர்.

பின், எஸ்டேட் மருத்துவமனைக்கு தகவல் கொடுத்து மருத்துவமனையிலிருந்து அவசர ஊர்தி வரவழைத்து சுஜாதா, பேபி, எமிமா, சாந்தி, ரேஜிதா ஆகிய ஐந்து பேரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

தலை, கை, கால் போன்ற இடங்களில் காயம் ஏற்பட்ட இடத்தில் அதற்கு தையல் போட்டு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

வால்பாறை பகுதிகளில் கன மழை காலங்களில் எஸ்டேட் நிர்வாகங்கள் பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் எஸ்டேட் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.