கோவை: தமிழ்நாட்டில் முதல்முறையாக ஹீமோபீலியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு கோவிட் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
கோவை: தமிழ்நாட்டில் முதல்முறையாகஹீமோபீலியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு கோவிட் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் ஹீமோபீலியா சொசைட்டி கோயம்புத்தூர் கிளையும் இணைந்து இன்று ஹீமோபீலியா எனும் ரத்தக் குறைபாடு உள்ள நபர்களுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைந்துள்ள ஹீமோபீலியா சிகிச்சை மையத்தில் சிறப்பு கோவிட் தடுப்பூசி முகாம் நடத்தியது. இது போன்ற நிகழ்வு தமிழ்நாட்டில் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.

இந்த நிகழ்ச்சியை கோவை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வர் நிர்மலா துவக்கி வைத்தார். இவ்விழாவில் அரசு மருத்துவமனை ஹீமோபீலியா நோடல் அதிகாரிகள் மங்கையற்கரசி, கீதாஞ்சலி மற்றும் குழந்தைகள் நல தலைமை மருத்துவர் பூமா. சமூக சேவகர் நிகில் மற்றும் ஹீமோபீலியா சொசைட்டி கோயம்புத்தூர் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஹீமோபீலியா என்னும் ரத்த குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 350 பேர் கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்களில் 1 வயதிற்கு மேற்பட்டவர்கள் 250 பேர் உள்ளனர். ஹீமோபீலியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பொழுது ரத்த கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
எனவே, ரத்தக் கசிவினை தவிர்க்க அவர்களது உடல்நிலைக்கு ஏற்ற Factor 8 & 9 செலுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டது. அதன் பின் இவர்களுக்கு சிறப்பு முகாமில் தடுப்பூசி (COVAXIN) செலுத்தப்பட்டது. மருத்துவமனையில் கூட்டம் கூடுவதை தவிர்க்க நாள் ஒன்றுக்கு 540 பயனாளிகள் மற்றும் அவர்களது 50 கவனிப்பார்களுக்குத் தடுப்பூசி போடப்படுகிறது.