தமிழ்நாட்டில்‌ முதல்முறையாக ஹீமோபீலியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவையில் சிறப்பு கோவிட் தடுப்பூசி முகாம்!

கோவை: தமிழ்நாட்டில் முதல்முறையாக ஹீமோபீலியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு கோவிட் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.


கோவை: தமிழ்நாட்டில் முதல்முறையாகஹீமோபீலியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு கோவிட் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

கோவை அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையும்‌ ஹீமோபீலியா சொசைட்டி கோயம்புத்தூர்‌ கிளையும்‌ இணைந்து இன்று ஹீமோபீலியா எனும்‌ ரத்தக்‌ குறைபாடு உள்ள நபர்களுக்கு கோவை அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில்‌ அமைந்துள்ள ஹீமோபீலியா சிகிச்சை மையத்தில்‌ சிறப்பு கோவிட்‌ தடுப்பூசி முகாம்‌ நடத்தியது. இது போன்ற நிகழ்வு தமிழ்நாட்டில்‌ நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்‌.



இந்த நிகழ்ச்சியை கோவை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வர்‌ நிர்மலா துவக்கி வைத்தார்‌. இவ்விழாவில்‌ அரசு மருத்துவமனை ஹீமோபீலியா நோடல்‌ அதிகாரிகள்‌ மங்கையற்கரசி, கீதாஞ்சலி மற்றும்‌ குழந்தைகள்‌ நல தலைமை மருத்துவர்‌ பூமா. சமூக சேவகர்‌ நிகில்‌ மற்றும்‌ ஹீமோபீலியா சொசைட்டி கோயம்புத்தூர்‌ உறுப்பினர்கள்‌ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்‌.



ஹீமோபீலியா என்னும்‌ ரத்த குறைபாட்டினால்‌ பாதிக்கப்பட்டவர்கள்‌ சுமார்‌ 350 பேர்‌ கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில்‌ வசித்து வருகின்றனர்‌. இவர்களில்‌ 1 வயதிற்கு மேற்பட்டவர்கள்‌ 250 பேர்‌ உள்ளனர்‌. ஹீமோபீலியாவால்‌ பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும்‌ பொழுது ரத்த கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள்‌ அதிகம்‌ உள்ளது.

எனவே, ரத்தக்‌ கசிவினை தவிர்க்க அவர்களது உடல்நிலைக்கு ஏற்ற Factor 8 & 9 செலுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டது. அதன்‌ பின்‌ இவர்களுக்கு சிறப்பு முகாமில்‌ தடுப்பூசி (COVAXIN) செலுத்தப்பட்டது. மருத்துவமனையில்‌ கூட்டம்‌ கூடுவதை தவிர்க்க நாள்‌ ஒன்றுக்கு 540 பயனாளிகள்‌ மற்றும்‌ அவர்களது 50 கவனிப்பார்களுக்குத் தடுப்பூசி போடப்படுகிறது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...