கோவையில் போதை வஸ்து அதிகரிப்பு- மளிகை கடையில் அதிரடியாக பறிமுதல்..!

கோவை: தடைசெய்யப்பட்ட போதை வஸ்துக்களை விற்பனைக்கு வைத்திருந்த மளிகைக் கடை உரிமையாளர்கள் மீது கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: தடைசெய்யப்பட்ட போதை வஸ்துக்களை விற்பனைக்கு வைத்திருந்த மளிகைக் கடை உரிமையாளர்கள் மீது கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை போன்ற போதை வஸ்துக்களை விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியம் உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து, கிணத்துக்கடவு பகுதியில் மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை செய்தனர்.

இந்த சோதனையில், சிக்கலாம் பாளையம் மற்றும் பாரதி நகர்ப் பகுதியில் உள்ள மளிகைக் கடையில் தடைசெய்யப்பட்ட போதை வஸ்துக்களை மறைத்து வைத்து விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடையில் மளிகை சாமான்களோடு போதை வஸ்துத்துகளை பதுக்கி வைத்திருந்த போது காவல்துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர்.

இதனையடுத்து, விற்பனைக்கு வைத்திருந்த போதை வஸ்துக்களைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் கடை உரிமையாளர்கள் விஜயகுமார் மற்றும் அருண்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...