திருப்பூர்: 11-ஆம் வகுப்பு சேர்க்கைக்குத் தமிழ் வழிக் கல்விக்கு 1,800 ரூபாயும், ஆங்கில வழிக் கல்விக்கு 2,300 ரூபாய் எனக் கட்டாய கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி அனைத்து கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் கொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11-ஆம் வகுப்பு சேர்க்கைக்குத் தமிழ் வழிக் கல்விக்கு 1,800 ரூபாயும், ஆங்கில வழிக் கல்விக்கு 2,300 ரூபாய் எனக் கட்டாய கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதன் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாணவர்களின் கல்வி இடை நிற்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த அனைத்து கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.