கோவை: கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் சமூக விரோத செயல்களான மது, சூதாட்டம் மற்றும் கஞ்சா விற்பனை செய்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் சமூக விரோத செயல்களான மது, சூதாட்டம் மற்றும் கஞ்சா விற்பனை செய்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாயகத்தின் உத்தரவின் பேரில், மேட்டுப்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெய்சிங் அறிவுரையின் பேரில், மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரன் செல்வநாயகம் முருகேசன் மற்றும் போலீசார் மேட்டுப்பாளையத்தை அடுத்த ஊமப்பாளையம் பகுதியில் நேற்று திடீரென ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த பகுதியில் சமூக விரோத செயல்களான மது, சூதாட்டம் மற்றும் கஞ்சா விற்பனை செய்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் கோவை மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில்,
மதுவிலக்கு வழக்குகள்
மொத்த வழக்குகள் : 5
கைது செய்யப்பட்ட எதிரிகள் : 6
பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் விவரம் :129 மது பாட்டில்கள்
கஞ்சா வழக்கு
மொத்த வழக்குகள் : 02
கைது செய்யப்பட்ட எதிரிகள் : 4
பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் விபரம் : 1.900 கிலோ கிராம்
சூதாட்ட வழக்குகள்
மொத்த வழக்குகள் : 01
கைது செய்யப்பட்ட எதிரிகள் : 04
பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் விபரம் : ரூ.800/-
புகையிலை வழக்குகள்
மொத்த வழக்குகள்: 03
கைது செய்யப்பட்ட எதிரிகள்: 06
பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் விபரம்: 37 புகையிலை பாக்கெட். மேற்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவலை 7708100100 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியங்கள் காக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.