கோவை கிணத்துக்கடவு வட்டாரத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க மானியம் - தோட்டக்கலைத்துறை தகவல்!

கோவை: கோவை கிணத்துக்கடவு வட்டாரத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை கிணத்துக்கடவு வட்டாரத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை கிணத்துக்கடவு வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோமதி வெளியிட்டுள்ள அறிக்கையில்.,

கிணத்துக்கடவு வட்டார பகுதியில் காய்கறிச் செடிகள், பழச்செடிகள் மருத்துவ பயிர்கள் மற்றும் தென்னை சாகுபடிக்கு சொட்டு நீர் பாசனம் தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்படுகிறது என்றும் சிறு குறு மற்றும் இதர விவசாயிக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது என்றும் ஐந்து ஏக்கர் வைத்திருக்கும் சிறு குறு விவசாயிகளுக்கும், இதர விவசாயிகளுக்கு 12.5 ஏக்கருக்கு மானியம் வழங்கப்படுகிறது.



நடப்பாண்டில் சொட்டுநீர் பாசனம் அமைத்த பயனாளிகளுக்கு துணைநிலை நீர் சேமிப்பு திட்டத்தின் கீழ் மோட்டார் மற்றும் நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க 50 சதவீதம் மானியம் அனுமதிக்கப்படுகிறது என்றும் இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் சிட்டா, அடங்கல், ரேஷன் கார்டு, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் மற்றும் சிறு குறு விவசாயி சான்று, 3 பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுக வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு 9585098230, 9965562700 ஆகிய எங்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...