பல்லடம் பகுதியில் 19 மயில்கள் பலி... ஒருவரை பிடித்து வனத்துறையினர் விசாரணை..!

கோவையின் சுற்றுப்புறப் பகுதிகளில் மயில்கள் அதிகம் உள்ளன. இறை தேடி தோட்டங்களுக்கு வருகின்ற மயில்களில் பல்லடம் அருகே 19 மயில்கள் பலியானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஒருவரை பிடித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: கோவையின் சுற்றுப்புறப் பகுதிகளில் மயில்கள் அதிகம் உள்ளன. இறை தேடி தோட்டங்களுக்கு வருகின்ற மயில்களில் பல்லடம் அருகே 19 மயில்கள் பலியானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஒருவரை பிடித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மற்றும் அருகே உள்ள சுற்றுப்புறத்தில் உள்ள மாவட்டங்களில் இந்திய தேசியப் பறவையான மயில்கள் அதிகம் காணப்படுகின்றன. அவை மாலை நேரங்களில் இறை தேடி தோட்டங்களுக்கு வருவது வழக்கம். இந்தநிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று 19 மயில்கள் இறந்து கிடந்தன. இந்தத் தகவல் கேள்விப்பட்டதும் வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மயில்களை உடற்கூறு ஆய்விற்கு அனுப்பினர். அதில் மயில்களை விஷம் வைத்துக் கொல்லப்பட்ட தகவல் தெரிய வந்தது. அதனால் தோட்டத்தின் உரிமையாளரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கணபதிபாளையம் ஊராட்சி, வலசுபாளையம் - நாச்சியார் தோட்டம் பகுதியில், மயில்கள் இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதே பகுதியைச் சேர்ந்த பழனிசாமி(65), என்பவரின் தோட்டத்தில், 19 மயில்கள் இறந்து கிடந்ததை வனத்துறையினர் கண்டறிந்தனர். மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டது என்பதை, உடற்கூறு ஆய்வின் அடிப்படையில், கால்நடை மருத்துவர் அறிவுச்செல்வன் உறுதி செய்தார். வன அலுவலர் காசிலிங்கம் கூறுகையில், 'தோட்டத்துக்கு வரும் மயில்கள், பாத்திகளை சேதப்படுத்தியுள்ளன. கோபமடைந்த விவசாயி பழனிசாமி அரிசியுடன் விஷமருந்து கலந்து வைத்துள்ளார். அதை சாப்பிட்ட, 12 பெண், மற்றும் ஏழு ஆண் மயில்கள் உயிரிழந்தன. பழனிசாமியை கைது செய்து விசாரிக்கிறோம்' என்றார். கடந்த வாரம், திருப்பூர் அருகே முத்தணம்பாளையத்தில், 24 மயில்கள் இறந்தன. தற்போது பல்லடம் வட்டாரத்தில், 19 மயில்கள் உயிரிழந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...