வால்பாறை நகரில் உலா வரும் சிறுத்தையைக் கண்காணிக்க நவீன கண்காணிப்பு கேமரா..!

கோவை: வால்பாறை நகரில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து உலா வரும் சிறுத்தைகளைக் கண்காணிக்க நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.


கோவை: வால்பாறை நகரில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து உலா வரும் சிறுத்தைகளைக் கண்காணிக்க நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகமாக உள்ளது. இங்கு ஏராளமான புலி, சிறுத்தை, கரடி, யானை போன்ற வனவிலங்குகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக வால்பாறை நகரில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த சில வாரங்களாக கண்காணிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டு இருந்தது. வால்பாறை நகரை ஒட்டியுள்ள வாழைத்தோட்டம் பகுதியில் இரு இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.



இருப்பினும், சிறுத்தை கூண்டில் சிக்காமல் வனத்துறைக்கு போக்கு காட்டி வருகிறது. இலங்கையில் கடந்த சில தினங்களுக்கு முன் வால்பாறை மத்திய பகுதியான காந்தி சிலை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்புறம் சிறுத்தைகள் நடமாடிய காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியானது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியது இதைத்தொடர்ந்து வால்பாறை வனச் சரகத்தைச் சேர்ந்த வனத்துறையினர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய இரு கேட்டிலும் முன்புறம் உள்ள படிக்கட்டு பகுதிகளிலும் 3 நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனர். இதன்மூலம் சிறுத்தைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...