நீலகிரி மாவட்டம் உதகை அருகே தடுப்பு வேலியில் சிக்கிய சிறுத்தை நான்கு மணி நேர போராட்டத்திற்குப் பின்பு உயிரிழந்தது..!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள எல்லநள்ளி ஜோதி நகர் பகுதியில் தடுப்பு வேலியில் சிக்கிய சிறுத்தை சுமார் நான்கு மணி நேர போராட்டத்திற்கு பின்பு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள எல்லநள்ளி ஜோதி நகர் பகுதியில் தடுப்பு வேலியில் சிக்கிய சிறுத்தை சுமார் நான்கு மணி நேர போராட்டத்திற்கு பின்பு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அண்மைக்காலமாக வளர்ப்பு நாய் மற்றும் கால்நடைகளை சிறுத்தைகள் அடித்துச் செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்தநிலையில், கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட எல்லநள்ளி அருகேயுள்ள ஜோதிநகர் என்னும் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியில் சிக்கிய, 3 வயது மதிப்புடைய ஆண் சிறுத்தை ஒன்று உயிருக்குப் போராடி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.



இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனவிலங்கு பாதுகாப்பு மீட்புக்குழுவினர்கள் பாதுகாப்பு உடை அணிந்து சிறுத்தையை உயிருடன் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.



சுமார் நான்கு மணி நேரம் போராட்டத்திற்குப் பின் சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், உயிரிழந்த சிறுத்தை பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது. சிறுத்தை உயிரிழந்தது குறித்து சம்பந்தப்பட்ட நில உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...