கோவை: கோவை போத்தனூர் அருகே நேற்று மாலை சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. அப்பொழுது வீட்டு முன்பாக விளையாடிக் கொண்டிருந்த எட்டாம் வகுப்பு மாணவன் அருகில் இருந்த மின் கம்பியைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

கோவை அருகே உள்ள எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மகன் ஸ்ரீசாந்த் வயது 12, இவர் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இரவு சிசாந்த் வீட்டு முன்பு உள்ள மின் கம்பத்தைப் பிடித்தபடி அந்தப் பகுதியில் உள்ள சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது லேசாக மழை பெய்துகொண்டிருந்தது. இதனால் அதில் மின்சாரம் பாய்ந்து மின் கம்பத்தை பிடித்து விளையாடிக் கொண்டிருந்த ஸ்ரீசாந்தை கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்கி தூக்கி வீசியது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் உள்ளவர்கள் ஸ்ரீசாந்த்தை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகக் கூறினார்கள். போத்தனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.