வால்பாறையில் கனமழை எதிரொலி: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம்!

கோவை: வால்பாறையில் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தற்காலிக முகாம் அமைக்கப்பட்டுள்ளது.


கோவை: வால்பாறையில் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தற்காலிக முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஒரு வாரகாலமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், வால்பாறை நகரை ஒட்டியுள்ள நடுமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, வால்பாறை பகுதியில் மழை பெய்து வருவதால் ஆற்றின் ஓரத்தில் உள்ள அண்ணாநகர், எம்ஜிஆர் நகர், வாழைத்தோட்டம், டோபி காலனி பகுதிகளில் வெள்ளம் அதிகரித்து வீடுகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



மேலும், புதுத் தோட்டம் ஆற்றில் வெள்ளம் அதிகரித்தால் காமராஜர் நகர், கக்கன் காலனி, சிறுவர் பூங்கா பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு வால்பாறை வருவாய்த்துறையினர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக முகாம் அமைத்துள்ளனர்.

மேலும், நகராட்சி சார்பில் வானத்தில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள முகாமுக்கு வருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, 1077 என்ற எண்ணுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மழை வெள்ள பாதிப்புகள் குறித்து வட்டாட்சியர் அலைபேசி எண் 9445000577க்கு தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...