கோவை: கோவை மாநகராட்சியில் கடந்த 2014 முதல் 2018 வரை கனரக வாகன பராமரிப்புக்காக ரூபாய் 54 கோடி செலவிடப்பட்டுள்ளதாக வரவு செலவு திட்டத்தில் குறிப்பிட்டுள்ளது.
கோவை: கோவை மாநகராட்சியில் கடந்த 2014 முதல் 2018 வரை கனரக வாகன பராமரிப்புக்காக ரூபாய் 54 கோடி செலவிடப்பட்டுள்ளதாக வரவு செலவு திட்டத்தில் குறிப்பிட்டுள்ள ரசீது நகல் கோரி சமூக ஆர்வலர் S.P. தியாகராஜன் அவர்கள் கோவை மாநகராட்சி உதவி ஆணையர் (கணக்குகள்) அவர்களிடம் தகவல் அறியும் உரிமை சட்டம் - 2005 மூலம் மனு செய்யப்பட்டது. மேற்படி மனுவினை உதவி ஆணையர் (கணக்கு) அவர்கள் 5 மண்டல உதவி ஆணையர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு மனுதாரருக்கு உரிய ஆவணங்களை வழங்க கேட்டுக் கொண்டார். மனுவை பெற்றுக் கொண்ட 5 மண்டல உதவி ஆணையர்கள் ரசீது நகல்களை வழங்கப்படாமல் செலவிடப்பட்டுள்ள தொகைகளை மட்டும் குறிப்பிட்டு பதில் வழங்கியுள்ளனர். சமூக ஆர்வலர் S.P.தியாகராஜன் அவர்கள் மீண்டும் துணை ஆணையாளர் அவர்களிடம் மேல் முறையீடு செய்யப்பட்டும் ரசீது நகலை வழங்க வழிவகை யில்லை என தகவல் வழங்கியதை தொடர்ந்து மீண்டும் கடந்த 2020 செப்டம்பர் மாதம் தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு இரண்டாம் மேல் முறையீடு செய்யப்பட்டதில் 9 மாதங்களுக்கு பிறகு 2 -7 - 2021 தேதியன்று சார்பு செயலாளர் அவர்களால் வருகிற 21-7 - 21க்குள்
5 மண்டல உதவி ஆணையர்களால் ஆவணங்களை ( ரசீது) வழங்கப்பட வேண்டும் என உத்திரவிடப்பட்டுள்ளது.
மேலும் மற்றொரு வழக்கில் சமூக ஆர்வலர் S.P தியாகராஜன் அவர்கள் கோவை மாநகராட்சி கணக்குப்பிரிவில் உள்ள வரவு செலவு பதிவேட்டில் கடந்த 2016 முதல் 2020 வரை உள்ள அனைத்து பக்கங்களையும் வழங்கிட வேண்டும் என கோரிய இரண்டாம் மேல் முறையீட்டு மனுவிற்கும் தமிழ்நாடு தகவல் ஆணையம் 2-7- 21 ன்படி உத்தரவில் ஆவணங்களை வருகிற 21-7-21க்குள் வழங்கிட வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது
150 புது லாரி வாங்கியிருந்தாலே 25 கோடிதான் ஆகும் அதுவும் மேற்கண்ட 150 கனரக வாகனங்கள் 10 வருடங்களுக்குள் வாங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.