மாநகராட்சி கனரக வாகன பராமரிப்புக்கு ₹54 கோடியா? புதிதாக வண்டியே வாஙிருக்கலாமே எனும் அதிர்ச்சியில் சமூக ஆர்வலர்கள்

கோவை: கோவை மாநகராட்சியில் கடந்த 2014 முதல் 2018 வரை கனரக வாகன பராமரிப்புக்காக ரூபாய் 54 கோடி செலவிடப்பட்டுள்ளதாக வரவு செலவு திட்டத்தில் குறிப்பிட்டுள்ளது.



கோவை: கோவை மாநகராட்சியில் கடந்த 2014 முதல் 2018 வரை கனரக வாகன பராமரிப்புக்காக ரூபாய் 54 கோடி செலவிடப்பட்டுள்ளதாக வரவு செலவு திட்டத்தில் குறிப்பிட்டுள்ள ரசீது நகல் கோரி சமூக ஆர்வலர் S.P. தியாகராஜன்  அவர்கள் கோவை மாநகராட்சி உதவி ஆணையர் (கணக்குகள்) அவர்களிடம் தகவல் அறியும் உரிமை சட்டம் - 2005 மூலம் மனு செய்யப்பட்டது.  மேற்படி மனுவினை உதவி ஆணையர் (கணக்கு) அவர்கள் 5 மண்டல உதவி ஆணையர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு மனுதாரருக்கு உரிய ஆவணங்களை வழங்க கேட்டுக் கொண்டார். மனுவை பெற்றுக் கொண்ட 5 மண்டல உதவி ஆணையர்கள் ரசீது நகல்களை  வழங்கப்படாமல் செலவிடப்பட்டுள்ள தொகைகளை மட்டும் குறிப்பிட்டு பதில் வழங்கியுள்ளனர். சமூக ஆர்வலர் S.P.தியாகராஜன் அவர்கள் மீண்டும் துணை ஆணையாளர் அவர்களிடம்   மேல் முறையீடு செய்யப்பட்டும் ரசீது நகலை வழங்க வழிவகை யில்லை என தகவல் வழங்கியதை தொடர்ந்து மீண்டும் கடந்த 2020 செப்டம்பர் மாதம் தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு இரண்டாம் மேல் முறையீடு செய்யப்பட்டதில் 9 மாதங்களுக்கு பிறகு 2 -7 -  2021 தேதியன்று சார்பு செயலாளர் அவர்களால் வருகிற 21-7 - 21க்குள் 

5 மண்டல உதவி ஆணையர்களால் ஆவணங்களை ( ரசீது)  வழங்கப்பட வேண்டும் என உத்திரவிடப்பட்டுள்ளது.  

மேலும் மற்றொரு வழக்கில் சமூக ஆர்வலர் S.P தியாகராஜன் அவர்கள் கோவை மாநகராட்சி கணக்குப்பிரிவில் உள்ள வரவு செலவு பதிவேட்டில் கடந்த 2016 முதல் 2020 வரை  உள்ள அனைத்து பக்கங்களையும் வழங்கிட வேண்டும் என கோரிய இரண்டாம் மேல் முறையீட்டு மனுவிற்கும்  தமிழ்நாடு தகவல் ஆணையம் 2-7- 21 ன்படி உத்தரவில் ஆவணங்களை வருகிற 21-7-21க்குள்  வழங்கிட வேண்டும் என உத்தரவு  வழங்கப்பட்டுள்ளது

150 புது லாரி வாங்கியிருந்தாலே 25 கோடிதான் ஆகும் அதுவும் மேற்கண்ட 150 கனரக வாகனங்கள் 10 வருடங்களுக்குள் வாங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...