கோவை கிணத்துக்கடவு அருகே கடை முன்பு நிறுத்தி வைத்த மினிடோர் ஆட்டோ திருட்டு - போலீசார் விசாரணை!

கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கடை முன்பு நிறுத்தி வைத்த மினிடோர் ஆட்டோ திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கடை முன்பு நிறுத்தி வைத்த மினிடோர் ஆட்டோ திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கல்லாங்காட்டுபுதூர் பகுதியில் வசிப்பவர் செல்வேந்திரன் (51). இவர் பொள்ளாச்சி சாலையில் உள்ள சாலைபுதூர் பகுதியில் இரும்பு கடை நடத்தி வருகிறார். மேலும் சொந்தமாக மினிடோர் ஆட்டோவும் வைத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் இரும்புக்கடை முன்பு தனது மினிடோர் ஆட்டோவை நிறுத்தி விட்டு வீட்டுக்குச் சென்று விட்டார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை வந்து பார்த்த போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினிடோர் ஆட்டோ இல்லாததால் அதிர்ச்சியடைந்த செல்வேந்திரன் பல இடங்களில் தேடி பார்த்தும் மினிடோர் ஆட்டோ கிடைக்கவில்லை.

இதையடுத்து, கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் செல்வேந்திரன் இன்று காலை புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...