கோவை: கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த, கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினரான குறிச்சி பிரபாகரன், தனது பெயரில் போலியாக முகநூல் கணக்கு தொடங்கி, மோசடியில் ஈடுபட்டு தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வரும் நபர்கள் மீது கோவை காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

குறிச்சி பிரபாகரன் அளித்துள்ள புகார் மனுவில், ‘‘வணக்கம். நான் தற்போது கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினராகப் பணியாற்றி வருகிறேன். நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளேன். நான் முன்னாள் குறிச்சி நகராட்சி தலைவராகவும், குறிச்சி பகுதி திமுக செயலாளராகவும் இருந்து மக்கள் பணியாற்றி உள்ளேன்.

இந்தநிலையில் கடந்த 29-06-2021 அன்று எனது முகநூல் பக்கம் போன்று ஒரு போலியான முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டு அதன் மூலம் எனது நண்பர்கள் போத்தனூரைச் சேர்ந்த திரு. சிவா 9566353069, திரு. விக்னேஷ் 9790601047, மாச்சம்பாளையத்தை சேர்ந்த மதன் 994272344, மற்றும் குறிச்சியை சேர்ந்த திரு. பிரபு 9840159649 ஆகிய நான்கு பேரின் எண்ணிற்கும் பேஸ்புக் மெசஞ்சரில் குறுஞ்செய்தி அனுப்பி, நான் கேட்பதுபோல் பணம் கேட்கப்பட்டுள்ளது.

அவர்கள் என்னை நன்கு அறிந்ததால், இந்த தகவல் எனக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும், இதுபோல் எத்தனை பேருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. இத்துடன் இதன் விபர நகல்கள் இணைக்கப்பட்டுள்ளது.
பொதுவாழ்வில் உள்ள எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எனது பெயரில் போலியாக கணக்கு தொடங்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்து இதுபோல் பணம் பறிக்கும் வேளையில் ஈடுபட்ட நபர்களை கண்டறிந்து தக்க சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்'' என்று புகாரளித்துள்ளார்.